நவம்பர் 03, பெங்களூர் (Bangalore): ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 (T20 Series IND Vs AUS 2023) தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வந்தது. இந்த தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டன.
தொடரை கைப்பற்றிய இந்தியா: இவற்றில் இந்தியா 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி அடைந்துள்ளது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை, இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. எஞ்சிய இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தில், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் - மேத்திவ் வாட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் எதிர்கொள்கின்றன. Long Term Corona Effect: நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மரணத்திற்காக காத்திருக்கும் இளம்பெண்: கண்ணீரை வரவழைக்கும் அதிர்ச்சி தகவல்.!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தனது முதல் தோல்வியை அடைந்து கோப்பையை தவறவிட்டிருந்தாலும், இளம் வீரர்கள் நிறைந்துள்ள டி20 தொடர் இந்தியாவுக்கு முழு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கும் ஒரு வெற்றி ஆஸி., வசம் சென்றது.
வெற்றி யாருக்கு?: இன்றைய இறுதிப்போட்டியில் எந்த மாதிரியான முடிவுகள் வரினும், இந்தியா டி20 தொடரில் ஆஸி., அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றிபெறவேண்டிய நிலையில் உள்ளது. ரசிகர்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.
நேரலையில் கண்டு மகிழுங்கள்: டி20 தொடர் போட்டியை ஜியோ சினிமா செயலியிலும், ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் நேரலையில் கண்டு மகிழலாம். ஞாயிற்றுக்கிழமையான இன்று இரவு இந்திய நேரப்படி 07:00 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.