Kelly Louise Smith (Photo Credit: @DailyMirror)

டிசம்பர் 02, லண்டன் (London): கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச அளவில் பெருந்தொற்றாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக 6,945,012 பேர் உயிரிழந்தனர். இந்த தொற்று பரவிய காலங்களில், முதல் மூன்று அலைகள் தந்த மரண எண்ணிக்கையால் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சர்வதேச அளவிலான பயணிகள் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டனர். கொரோனா தடுப்பூசியின் அறிமுகத்திற்கு பின்னர் கொரோனாவின் தாக்கம் இருந்தபோதிலும், அவை கட்டுக்குள் வந்தது.

ஆனால், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்டகால உடல்நிலை பிரச்சனையையும் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இந்த விஷயம் குறித்து உலகளவிலான ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். கொரோனா அறிமுகமாகும் போதே நீண்டகால கோவிட் தொற்று மரணத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணி கெல்லி லூயிஸ் ஸ்மிட் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு நீண்டகால கொரோனா ஏற்பட்டுவிட, கடந்த 3 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் நரக வேதனையை அனுபவித்து இருக்கிறார். கணவர் ஸ்டூவர்ட் மே பெண்ணுக்கு உறுதுணையாக இருந்தபோதிலும், 3 ஆண்டுகள் அவர் அனுபவிக்கும் துன்பத்தை பெண்மணி மனதளவில் நினைத்து வருந்தி இருக்கிறார்.

இதனால் தன்னை கருணைக்கொலை செய்ய ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை வைக்கும் பெண்மணி, எனது மரணமே கணவரின் பல துயரங்களுக்கு விடுதலை தரும் என்றும் கெல்லி கூறுகிறார். இந்த விசயத்திற்கு பெண்ணின் கணவரும் மனைவியின் மனநிலை மற்றும் மருத்துவ நிலையை புரிந்துகொண்டு விழிபிதுங்கி இருக்கிறார். Dutch Girl tie Knot with Indian: இந்து முறைப்படி, காதலரை கரம்பிடித்த நெதர்லாந்து பெண்மணி.. திருமணம் முடிந்த கையுடன் கொண்டாட்டம்.! 

கடந்த 8 ஆண்டுகளாக தம்பதி உயிருக்கு உயிராக இருந்த நிலையில், இருவருக்கும் 4 வயதுடைய குழந்தை இருக்கிறது. தனது அன்பான குழந்தையுடன் நொடிநேரம் கூட செலவிட இயலாத சூழலில், தாய் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பி இருக்கிறார். அவரின் குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டில் குழந்தைபோல இருக்கும் மனைவியை கவனிக்க முதலில் வேலையை துறந்த கணவர், பின்னாளில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட தொடங்கியுள்ளார். இதனாலேயே அவரின் மனைவி தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்து, அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, அவர் தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை அடைவர் என கெல்லி கூறுகிறார்.

தம்பதிகள் இருவரும் காதலித்தபோது மகிழ்ச்சியாக இருந்த நிலையில், தற்போது கெல்லியின் உடல்நிலை வெகுவாக மோசமடைந்து இருக்கிறது. அவர் தினமும் கணவரால் நன்கு கவனிக்கப்பட்டுக்கொண்டாலும், அவர் சிறையில் வாழ்வதைப்போல தவித்து வருகிறார். நீண்டகால கோவிட் காரணமாக தனது மனைவிக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதாக ஸ்டூவர்ட்டும் கண்ணீர் வடிக்கிறார்.

நீண்டகால கொரோனா அறிகுறிகள்: மிகுந்த உடல் சோர்வு, மூச்சுத்திணறல், வாசனை இழப்பு, தசைகளில் வலி, மார்பு வலி, உறக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல், ஸ்டெராய்டு மருந்துகள், மூட்டுவலி, மனசோர்வு மற்றும் பதற்றம், காதுவலி போன்றவை ஆகும். கொரோனா தாக்கம் உங்களை தொடருவதுபோல சந்தேகம் இருப்பின், மருத்துவமனையில் சோதனை செய்து கொள்வது நல்லது.