ஒரே ஓவரில் 3 விக்கெட்.. IND Vs ENG 4th T20 போட்டியில் சாதனை படைத்த சபீக் முகமது.. சஞ்சு, தில, சூரியகுமார் விக்கெட் அடுத்தடுத்து காலி.!

நீண்ட எதிர்பார்ப்பு மற்றும் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 ஆட்டம், மூன்றாவது போட்டிக்கு பின்னர் புதிய வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டம் சுவாரசியம் அடைந்துள்ளது.

ஒரே ஓவரில் 3 விக்கெட்.. IND Vs ENG 4th T20 போட்டியில் சாதனை படைத்த சபீக் முகமது.. சஞ்சு, தில, சூரியகுமார் விக்கெட் அடுத்தடுத்து காலி.!
Sanju samson, Tilak Varma and Suryakumar Yadav Wickets Fallen within Over by Shaqib Mahmood (Photo Credit: @chinmayshah28 / @SportsWithHarsh / @uroojjawed12 X)

ஜனவரி 31, புனே (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. குஜராத்தில் நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி அடைந்தது. இன்று புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், (IND Vs ENG 4th T20i Match) நான்காவது டி20 ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்ததால், இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. IND Vs ENG 4th T20i: டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து; இன்று வெற்றி யாருக்கு? சுவாரசியத்தை தந்துள்ள இந்தியா - இங்கிலாந்து ஆட்டம்.!

3 விக்கெட் அடுத்தடுத்து பறிபோனது:

இந்நிலையில், இரண்டாவது ஓவரில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதலில் 1.1 ஓவரில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) விக்கெட் பறிபோனது. ஜேக்கப் பெத்தல் (Jacob Bethell) சஞ்சு எதிர்கொண்ட பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். திலக் வர்மா (Tilak Varma) 1.2 வது பந்திலேயே ஜோபர் ஆர்ச்சரிடம் (Jofra Archer) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) ப்ரைடன் கார்ஸிடம் (Brydon Carse) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் சபீக் முகமது (Saqib Mahmood) வீசிய இரண்டாவது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையை ஆட்டத்திற்கு வழங்கியது.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டை வீழ்த்தி, ஆடவர் டி20 போட்டியில் புதிய சாதனை படைத்த சபீக்:

இந்த ஆட்டத்தை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஓடிடியில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் (Disney Hotstar)ல் நேரலையில் பார்க்கலாம்.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 08:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).