India Vs South Africa: இந்தியா Vs தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஹைலைட்ஸ்.. 2வது இன்னிங்ஸ் நிலவரம் என்ன?
India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ் 2 வது நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 35 ஓவரில் 93 ரன்கள் எடுத்து இருந்தது.
நவம்பர் 15, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் (Team South Africa), இந்திய கிரிக்கெட் அணி (Team India Cricket) டெஸ்ட், ஒருநாள், டி20ஐ போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (South Africa National Cricket Team Vs India National Cricket Team) இடையே நடைபெறும் போட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. IND Vs SA Cricket 2025 போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றியை ஏந்திப்பிடிக்க முயற்சிக்கும். அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெற்றியை உறுதி செய்ய போராடும் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் அதிரடியாக சூடுபிடிக்கும். Bigg Boss Tamil 9: ஆபாச சைகை காட்டிய அரோரா.. எவிக்சனில் ஸ்டாரை தூக்கிய பிக் பாஸ்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?.. டுவிஸ்ட் எலிமினேஷன்.!
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி(India vs South Africa 1st Test):
இந்த தொடரின் முதல் ஆட்டமாக டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் தொடர், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் உற்சாகத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ஓவரில் 159 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கி 62.2 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் விட்டதை பிடிக்க இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி முயற்சி செய்த நிலையில், 2வது நாள் முடிவில் 35 ஓவரில் 93 ரன்கள் எடுத்து இருந்தது. இன்றைய நாளின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடர்ந்து ஆட்டம் நாளை நடைபெறும்.
ரவீந்திர ஜடேஜா அசத்தல்:
A massive impact yet again! ☝️☝️
🎥 Ravindra Jadeja on fire in the second innings with a double-wicket over! 🔥
Updates ▶️ https://t.co/okTBo3qxVH #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imjadeja pic.twitter.com/f12j1dMOIX
— BCCI (@BCCI) November 15, 2025
(The above story first appeared on LatestLY on Nov 15, 2025 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

