IND Vs WI 1st Test: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை (அக்டோபர் 02) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 01, அகமதாபாத் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs WI) விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகளும், இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். இத்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, நாளை (அக்டோபர் 02) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. AUSW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ஆஷ்லீ கார்ட்னர் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்..!
இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் 2025 (India Vs West Indies Test Series 2025):
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 23 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இந்திய அணி வீரர்கள்:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா (துணைக் கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, என். ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதனேஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், காரி பியர், ஜோஹன் லேன், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், ஜெடியா பிளேட்ஸ், கெவ்லான் ஆண்டர்சன், டெவின் இம்லாச்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

