AUSW Vs NZW Batting First (Photo Credit: @Sportify777 X)

அக்டோபர் 01, இந்தூர் (Sports News): ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (Women's Cricket World Cup 2025) நேற்று (செப்டம்பர் 30) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி டிஎல்எஸ் முறைப்படி, 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது. இதனையடுத்து, இன்று (அக்டோபர் 01) 2வது போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். NZ Vs AUS 1st T20I: மிட்செல் மார்ஷ் அதிரடி.. டிம் ராபின்சன் சதம் வீண்.., ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணி (Australia Women Vs New Zealand Women):

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 49.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆஷ்லீ கார்ட்னர் 115 ரன்கள், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 45 ரன்கள், கிம் கார்த் 38 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து மகளிர் அணி சார்பில் ஜெஸ் கெர் மற்றும் லியா தஹுஹு தலா 3 விக்கெட்கள், ப்ரீ இல்லிங் மற்றும் அமெலியா கெர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற 327 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மகளிர் அணி:

அலிசா ஹீலி (கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், அலனா கிங், கிம் கார்த், டார்சி பிரவுன்.

நியூசிலாந்து மகளிர் அணி:

சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ப்ரீ இல்லிங்.