INDW Vs AUSW: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தரமான சம்பவம்.. ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் இலக்கு.!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

India Vs Australia Women's Cricket Match (Photo Credit : @BCCIWomen X)

அக்டோபர் 12, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை 12 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அக்டோபர் 11-ஆம் தேதி இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 13-வது போட்டியில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) மோதுகின்றன. Ind Vs WI Highlights, 2nd Test: மாயாஜாலம் செய்த குல்தீப் & ஜடேஜா.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.! 

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் (India - Australia Women's Cricket Match):

இந்த போட்டி அக்டோபர் 12-ஆம் தேதியான இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். முன்னதாக கடந்த அக்டோபர் 09-ஆம் தேதி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும், 26 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராகவும் களமாடுகிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஸ்கோர் விபரம்:

இந்த நிலையில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய பிரதிகா ராவல் 96 பந்துகளில் 75 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 66 பந்துகளில் 80 ரன்களும், ஹர்லின் டியோல் 42 பந்துகளில் 38 ரன்களும், ஹர்மன் பிரீத் கவுர் 17 பந்துகளில் 22 ரன்களும், ஜெமியா 21 பந்துகளில் 33 ரன்களும், ரிச்சா கோஸ் 22 பந்துகளில் 32 ரன்களும், அமஞ்சோத் கவுர் 12 பந்துகளில் 16 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். மொத்தமாக 48.5 ஓவரில் இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் இழந்தாலும் 330 ரன்கள் சேர்த்திருந்தது. இதனை அடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி களம் இறங்குகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய அனபெல் சுதர்லேண்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் சமமான திறனை வெளிப்படுத்தலாம் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வந்து விடும் என்பதால் போட்டி சுவாரசியமடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றியை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஸ்மிருதி மந்தனா அசத்தல் ஆட்டம்:

பிரதிகா ராவல் அசத்தல் ஆட்டம்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement