அக்டோபர் 12, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி - இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் (India - West Indies) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி Vs மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்தியா எதிர் வேஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் போட்டி (India Vs West Indies Cricket Match):
இந்திய அணியின் சார்பில் களமிறங்கி விளையாடிய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் விக்கெட்டுகள் பெருவாரியாக இழக்கப்படாமல் போட்டி டிக்லர் செய்யப்படும் நிலைக்கு வந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் 258 பந்துகளில் 175 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் மொத்தமாக 22 பவுண்டரிகள் விளாசி இருந்தார். கே.எல் ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். சாய் சுதர்சன் 165 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். 12 பவுண்டரிகளையும் விளாசி இருந்தார். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 196 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். மொத்தமாக 16 பவுண்டரியில் இரண்டு சிக்ஸர்களை விளாசி இருந்தார். நிதிஷ்குமார் ரெட்டி 54 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். துருவ் ஜூரல் 79 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 134.2 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்திருந்தது. Ind Vs WI Highlights, 2nd Test: ஜடேஜா அசத்தல்.. ஒரேநாளில் 4 விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி.. இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி.!
ரவீந்திர ஜடேஜா அசத்தல் (Ravindra Jadeja):
𝙄.𝘾.𝙔.𝙈.𝙄
Good bowling 🤝 Sharp fielding
Ravindra Jadeja led #TeamIndia's charge today with the ball 🔥
Updates ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank | @imjadeja pic.twitter.com/vrkGka7Pm7
— BCCI (@BCCI) October 11, 2025
மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்கோர்கார்டு :
இதனைத் தொடர்ந்து வெற்றிக்கு 518 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சொதப்பல் ஆட்டம் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் விளையாடிய ஜான் காம்பெல் 25 பந்துக்கு 10 ரன்களும், தஜெனரின் சந்தர்பால் 67 பந்துகளுக்கு 34 ரன்களும், அலிக் அத்தனாஸ் 84 பந்துகளுக்கு 41 ரன்களும், ஷாய் ஹோப் 57 பந்துகளுக்கு 36 ரன்களும், டேவின் இம்லாச் 67 பந்துகளுக்கு 21 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 20 பந்துகளில் 17 ரன்களும், ஜோமெல் வாரிக்கன் 5 பந்துகளில் 1 ரன்னும், காரி பியர் 46 பந்துகளுக்கு 23 ரன்களும், அன்டர்சன் பிலிப் 93 பந்துகளில் 24 ரன்களும், ஜெய்டன் சேல்ஸ் 25 பந்துகளில் 13 ரன்களும் எடுத்துள்ளனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் 7 பந்துகளில் ரன் எடுக்காமல் அவுட்டானார். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகம்மது சிராஜ் 1 விக்கெட்டையும், ஜஸ்பிரித் பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 81.5 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
விக்கெட்டுகளை குவிக்கும் குல்தீப் யாதவ்:
Accuracy 🎯
Kuldeep Yadav and Mohd. Siraj with absolute beauties👌
Updates ▶ https://t.co/GYLslRyLf8#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @imkuldeep18 | @mdsirajofficial pic.twitter.com/KpE6zXyuz9
— BCCI (@BCCI) October 12, 2025