Sachin Chants in Flight: சச்சின்., சச்சின்... விமானத்தை மைதானமாக்கிய ரசிகர்கள்.. இருகரம் கூப்பி நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன கிரிக்கெட் ஜாம்பவான்.!
இந்தியர்கள் மட்டுமல்லாது உலகளவில் வாழும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தெய்வமாக குடிகொண்டு இருக்கும் சச்சினுக்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது.
பிப்ரவரி 21, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar), தற்போது சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அனைத்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று, மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். கிரிக்கெட் அணிகளுக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனை ஆகியவற்றையும் வழங்குகிறார். தனது கிரிக்கெட் வாழ்வில் இந்தியாவின் வெற்றியை உலகுக்கு பறைசாற்றிய சச்சின், இன்று வரை அசைக்க முடியாத அன்பையும் விதைத்து இருக்கிறார்.
எளிமையான குணம் கொண்ட நபர்: சச்சின் மைதானங்களில் களமிறங்கும்போது சச்சின்., சச்சின் என்று அவரின் பெயரை ரசிகர்கள் உச்சரிக்க, சச்சின் என்ற பெயர் ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவைக்கும். அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பின்னர் அதற்கான வாய்ப்புகள் எங்கும் கிடைக்காமல் போனது. தனது வேலை, தன்னை சந்திப்போரிடம் அன்பாக பேசுவது என எளிமையான குணம் கொண்ட சச்சின், அவ்வப்போது தனது மனதில் உள்ள கருத்துக்களை சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்வார். Auto Rickshaw Accident: அப்பளம்போல நொறுங்கிய ஆட்டோ; 9 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி.. கேட்டரிங் பணியாளர்களுக்கு நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சோகம்.!
ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட, சச்சின் காரில் பயணம் செய்துகொண்ட இருந்தபோது தனது பெயரில் டீ-சர்ட் அணிந்து சென்ற ரசிகரிடம் பேசி, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் செயல்பட்டு இருந்தார். இது பலரிடமும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், தற்போது மைதானங்களில் சச்சின் கண்ட மகிழ்ச்சியை, விமானத்திற்குள் (Fans Chant Sachin Sachin) ரசிகர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். இந்த விசயம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலரும் நினைவுகள்: விமான பயணத்தின் போது சாதாரண வகுப்பில் பயணம் செய்த சச்சினை கண்டு பூரிப்படைந்த ரசிகர்கள் பலரும் சச்சின்., சச்சின் என்ற மந்திரச்சொல்லை முழங்க ஒருகணம் பலருக்கும் புல்லரிப்பு ஏற்பட்டுப்போனது. பின் சச்சின் எழுந்து இருகரம் கூப்பி தனது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
When the entire flight turns into a stadium with Sachinnn Sachinnn Chants 🥳 @sachin_rt pic.twitter.com/fpXiDTvARA
— Sachin Tendulkar Fan Club (@OmgSachin) February 20, 2024
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

