Lakhisarai Accident (Photo Credit: @viralsach24 / @live_insider X)

பிப்ரவரி 21, லக்கிசராய் (Bihar Accident News): பீகார் மாநிலத்தில் உள்ள லக்கிசராய் (Lakhisarai Accident) மாவட்டம், பிஹாராவுறா கிராமத்தில் ஆட்டோ ஒன்று இன்று அதிகாலை 1:00 மணிக்கு மேல் பயணித்தது. வாகனத்தில் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக தெரியவருகிறது. அச்சமயம், ஆட்டோவின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

நடுரோட்டில் பயங்கர அலறல் சத்தம்: விபத்தில் சிக்கிய பயணிகள் உயிருக்காக அலறித்துடிக்க, ஆட்டோ மீது மர்ம வாகனம் பலமாக மோதியதால் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்துபோனது. நள்ளிரவு நேரத்தில் சாலையில் கேட்ட அலறல் சத்தம் கிராமத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனையடுத்து. அவ்வழியே வந்த பிற வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Virat Anushka Couple Blessed with Baby Boy: வாமிகாவுக்கு சகோதரனை பெற்றுக்கொடுத்த அனுஷ்கா சர்மா; தந்தையான குஷியில் விராட் கோலி.!

Accident (File Pic)

8 பேர் உடல் நசுங்கி பலி: தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த ராம்கர் சௌக் காவல் துறையினர், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் களமிறங்கினர். ஆயினும், ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் 8 பேர் நிகழ்விடத்திலேயும், ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீட்டிற்கு திரும்பிய கேட்டரிங் தொழிலாளர்களுக்கு சோகம்: ஆட்டோவின் மீது எந்த வாகனம் மோதியது? என்பது தற்போது வரை தெரியவில்லை. இதனால் காவல் துறையினர் மர்ம வாகனத்திற்கு வலைவீசி இருக்கின்றனர். முதகரட்ட விசாரணையில் 15 பேர் ஆட்டோவில் பயணம் செய்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அங்குள்ள முன்கர் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியை சேர்ந்தவர்கள். கேட்டரிங் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. Deepika Padukone Pregnant? நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமா?.. தீயாய் பரவும் வீடியோவை வைத்து வாழ்த்துகளை குவித்துத்தள்ளும் ரசிகர்கள்.! 

பலி எண்ணிக்கை உயரலாம்: ஆட்டோ ஓட்டுநர் மனோஜ் குமார், தீவானா குமார், சோட்டு குமார், ராமு குமார், அமித் குமார் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட காவலர்கள் மட்டுமல்லாது, பிற காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடம் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிக்கு உதவி இருந்தனர்.