Dinesh Karthik Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு; தினேஷ் கார்த்திக்கின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!

தனது சொந்த முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

Dinesh Karthik Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு; தினேஷ் கார்த்திக்கின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!
Dinesh Karthik Retirement (Photo Credit: @DineshKarthik X)

ஜூன் 01, சென்னை (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நம்பிக்கை நாயகனமானவர் கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik). இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு, இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார். Exit Polls 2024: மீண்டும் மோடி சர்க்கார்.. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் பாஜக - கருத்து கணிப்புகள் வெளியீடு.! 

ஓய்வுபெறுவதாக அறிவிப்பு: கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்து, இந்திய அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 2018 பின் உலகளாவிய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகி இருந்தார்.. அதனைத் தொடர்ந்து, டி20 போட்டிகளில் விளையாடி வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்து தான் விலகிக் கொள்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது மனமார்ந்த நன்றியை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ஓய்வை அறிவித்துள்ளார். இந்த முடிவு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படாத ஒன்று என்பதால், அவரின் பின்தொடர்பாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 07:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).