ஜூன் 01, புதுடெல்லி (New Delhi): 18 வது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 (General Elections India 2024) ஏழுகட்டமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது. ஜூன் 01ம் தேதியான இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்னும் 3 நாட்களில் (ஜூன் 04) அன்று ஒரேகட்டமாக (2024 Elections Results) வெளியாகிறது. மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமரபோகும் அணியை எதிர்பார்த்து இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய தலைவர்களும் காத்திருக்கின்றனர்.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு: இந்நிலையில், இந்தியா டுடே நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி (Exit Polls 2024), தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களும், அதிமுக-தேமுதிக கூட்டணி 6 இடங்களையும், பாஜக கூட்டணி 3 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரியவந்துள்ளது. அதேபோல, இந்திய அளவில் பாஜக 359 இடங்களையும், காங்கிரஸ் 154 தொகுகளையும், மற்றவை 30 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. BJP TMC Clash in WB: பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; செய்தியாளரின் மண்டை உடைப்பு.!
என்டிடிவி கருத்துக்கணிப்பு: என்டிடிவி கருத்துக்கணிப்பில் படி பாஜக கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் 125 இடங்களிலும், எஞ்சிய 47 இடங்களை சுயேச்சை மற்றும் பிற கட்சிகள் கைப்பற்றும் எனவும் தெரியவந்துள்ளது. சிஎன்என் 18 கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 3 இடங்களிலும், திமுக கூட்டணி 35 தொகுதிகளிலும், 2 தொகுதிகளை மற்றவை கைப்பற்றும் எனவும் தெரியவந்துள்ளது. ஏபிபி நிறுவனத்தின் தமிழ்நாடு அளவிலான கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணி ஒரு தொகுதி கைப்பற்ற மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இந்தியாவில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.