Virat Kohli Fitness: "விடுமுறை என்றாலும் கட்டாயம் ஓட வேண்டும்" - இளம் தலைமுறைக்கு விராட் கோலியின் அசத்தல் அறிவுரை.!

இன்று விடுமுறை என்றாலும், நாம் கட்டாயம் பயிற்சி எடுக்க வேண்டும் என விராட் கோலி பதிவிட, எதிர்வரும் போட்டிகளுக்கு தயாராக அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Virat Kohli Fitness:
Virat Kohli Workout (Photo Credit: Instagram)

ஆகஸ்ட் 15, புதுடெல்லி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli), இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 256 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டவர்கள் ஆவார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகை பதிவு செய்து ரூ.11.45 கோடி பணம் பெறுவதாக Hopper HQ அமைப்பு செய்திகளை வெளியிட்டது.

இதற்கு விராட் கோலியும் மறுப்பு தெரிவித்து இருந்தார். உலகக்கோப்பை, ஆசிய கோப்பை 2023 உட்பட பல போட்டிகளில் அடுத்தடுத்து கலந்துகொள்ளவுள்ள விராட் கோலி, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. Ethiopia Fire Explosion: வெடிமருந்து கிட்டங்கியில் பயங்கர வெடி விபத்து; 26 பேர் பரிதாப பலி.!

இந்த நாளில் உலகெங்கும் உள்ள இந்தியர்கள் தங்களது தாய்நாட்டின் சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாக சிறப்பித்து வருகின்றனர். பல நாடுகளும் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில், விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இன்று விடுமுறை என்றாலும், நாம் கட்டாயம் பயிற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரை பாராட்டியுள்ள விராட் கோலியின் பின்தொடர்பாளர்கள், அடுத்தடுத்த போட்டிகளுக்கு வெற்றிகரமாக தயாராகுங்கள் என அறிவுறுத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2023 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).