ஆகஸ்ட் 15, ஆடிஸ் அபாபா (Addis Ababa, Ethiopia): எத்தியோப்பியா நாட்டில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இக்குழுக்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரும் வன்முறையாக வெடித்ததால், அங்குள்ள பல மாகாணங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தொடர்ந்து சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடப்பதால், அரசு படைகள் - போராட்டக்காரர்கள் இடையே சண்டையும் நடந்து வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள Finote Selam மாகாணத்தில் அரசு - உள்ளூர் படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. PM Modi hoists National Flag: தில்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி; அசத்தல் காட்சிகள் இதோ.!
இந்த மோதலின்போது எதிர்படைகள் வைத்திருந்த வெடிமருந்து கிட்டங்கி வெடித்து சிதறியுள்ளது. இவ்விபத்தில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக களநிலவரங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 50-க்கும் அதிகமானோர் அங்குள்ள மருத்துவமனைகளில் தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றன. இந்த தகவலை Finote Selam நகரின் பொது மருத்துவமனை தலைமை இயக்குனர் Manaye Tenaw உறுதி செய்துள்ளார்.