Virat Kohli New Home Video: அசத்தும் இயற்கை எழிலுடன் விராட் கோலியின் புதிய வீடு; வியக்கவைக்கும் வீடியோ உள்ளே.!
இயற்கை எழிலுடன் கொண்ட தனிமையான வீடுகளை கட்டியுள்ள விராட் கோலி, அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஜூலை 09, அலிபாக் (Maharashtra News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கதாநாயகன், இந்திய அளவில் பல இளம் பெண்களின் மனதை கொள்ளைகொண்ட காதலன் விராட் கோலி (Virat Kohli). நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்ட விராட் கோலி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். FIR Against Virat Kohli Owned One8 Commune: விராட் கோலியின் பாருக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!
புதிய வீடு கட்டிய விராட்:
இந்நிலையில், விராட் கோலி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். இயற்கை கொஞ்சும் அழகுடன் கட்டப்பட்டுள்ள அந்த வீடு குறித்த வீடியோவை விராட் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த காணொளி வைரலாகி வருகிறது. கடந்த 12 மாதங்களுக்கு முன்னதாக தொடங்கிய வீட்டுப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது.
விராட் கோலியின் பெங்களூர் பார் மீது வழக்குப்பதிவு:
முன்னதாக விராட் கோலி உரிமையாளராக இருக்கும் ஒன் 8 கம்யூன் ரெஸ்டாரண்ட் & பார் பெங்களூர் கிளை மேலாளர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு பார் இயங்கவேண்டிய நேரத்தை விட, கூடுதல் நேரத்தில் செயல்பட்டது மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஒலியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ஆகிய காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The journey of building my Alibaug home has been a seamless experience, and seeing it all come together is truly gratifying. Huge thanks to the entire Avas team for making our dream home a reality. Can't wait to enjoy every moment here with my loved ones!#avaswellness… pic.twitter.com/x17iL3ETfM
— Virat Kohli (@imVkohli) July 9, 2024
(The above story first appeared on LatestLY on Jul 09, 2024 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

