Virat Kohli Owned One8 Commune (Photo Credit: @nenuunapaithyam / @imVkohli X)

ஜூலை 09, பெங்களூர் (Bangalore News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி (Virat Kohli). இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்திய அளவில் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காகவும் பல ஆண்டுகளாக வெற்றியை எதிர்நோக்கி விளையாடி வருகிறார். விளையாட்டை தாண்டி விராட் கோலி பல்வேறு துறைகளில் முதலீடு செய்து தொழிலும் செய்து வருகிறார்.

விராட் கோலியின் பார்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், எம்.ஜி ரோடு பகுதியில் விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யுன் (One8 Commune) பார் செயல்பட்டு வருகிறது. உயர்ரக நட்சத்திர ஹோட்டலாக செயல்பட்டு வரும் இதில், ஒவ்வொரு நாளும் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதேபோல, வாரஇறுதி நாட்களிலும் மக்கள் வெள்ளம் அலைமோதும். PM Modi Russia Visit: ரஷியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி; உற்சாக வரவேற்பு கொடுத்த அதிபர் விளாடிமிர் புதின்.! 

அதிகாரிகள் வழக்குப்பதிய காரணம்:

இந்நிலையில், மத்திய பெங்களூர் காவல்துறையினர், விராட் கோலியின் பாருக்கு (Virat Kohli owned One8 Commune) எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு 01:30 மணியை தாண்டி செயல்பட்டது, அதிக சப்தத்துடன் ஒலியை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது என பெறப்பட்ட புகார்களின் பேரில், எம்.ஜி சாலை பகுதியில் செயல்பட்டு வரும் 4 பார்களின் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் விராட் கோலியின் பார் நிர்வாகமும் சிக்கி இருக்கிறது.

டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா உட்பட பல நகரங்களில் கிளைகள் கொண்டுள்ள ஒன்8 கம்யூன், பெங்களூர் நகரில் சின்னசாமி மைதானம் அருகே அமைந்துள்ளது. பார் செயல்பட அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் செயல்பட்டதாக, பாரின் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

ஒன்8 கம்யூன் குறித்த விளம்பரத்தில் விராட் கோலி: