Indian Golfer Car Crash: இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்து; ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள சென்றபோது நேர்ந்த சம்பவம்..!

இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி அவர் உயிர்தப்பினார்.

Indian Golfer Car Crash: இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்து; ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள சென்றபோது நேர்ந்த சம்பவம்..!
Diksha Dagar (Photo Credit: @JM_Scindia X)

ஆகஸ்ட் 01, பாரிஸ் (Sports News): இந்திய கோல்ப் (Golf) வீராங்கனை திக்ஷா தாகர் (வயது 23), கடந்த ஜூலை 30-ஆம் தேதி அன்று இரவு பாரிஸில் கார் விபத்தில் (Car Accident) சிக்கினார். அந்த காரில் திக்ஷா, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் இருந்தனர். அன்றிரவு அவர்கள் இந்தியா ஹவுஸில் ஒரு விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் இவர்கள் பயணித்த கார் மீதி மோதியது. Olympic Athletes on OnlyFans: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாரிய அளவில் கவனிக்கப்பட்ட ஒன்லி பேன்ஸ் பிரபலங்கள்: விபரம் இதோ..!

இந்நிலையில், விபத்தில் சிக்கிய திக்ஷா தாகருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவரது தாயாருக்கு முதுகுத்தண்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி திட்டமிட்டபடி ஒலிம்பிக்கில் விளையாடுவார் எனவும், தொடர்ந்து பயிற்சிக்கும் சென்று வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது. திக்ஷாவின் 2-வது ஒலிம்பிக் போட்டியாகும். பெண்களுக்கான போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).