ஆகஸ்ட் 01, பாரிஸ் (Sports News): பாரிஸ் ஒலிம்பிக் 2024-ஆம் (Paris Olympics 2024) ஆண்டு, ஜூலை 26-யில் தொடங்கி ஆகஸ்ட் 11, 2024 அன்று முடிவடைகிறது. 2024 ஒலிம்பிக்கில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதில் ஹேண்ட்பால், பேட்மிண்டன் மற்றும் கால்பந்து, வில்வித்தை, நீச்சல் மற்றும் டென்னிஸ் போன்ற போட்டிகளில், ஒலிம்பிக் 2024 விளையாட்டு வீரர்கள் தங்கள் அபாரமான திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது திறமைகளால் மக்களை ஈர்க்கும் அதே வேளையில் பல விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க வீரர்களான ஜேக் லாஃப்டர், நோவா வில்லியம்ஸ் மற்றும் அலிஷா நியூமன், அலிகா எச்மிட் ஆகியோர் மட்டுமே ஒன்லிஃபேன்லிஸில் (Onlyகணக்கு வைத்திருக்கின்றனர்.
பிரிட்டிஷ் டைவர் ஜாக் லாஃப்டர்:
ஜாக் லாஃப்டர் ஒரு பிரிட்டிஷ் டைவர் ஆவார். இவர், பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார். மேலும், வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். Paris Olympics 2024: ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா வெற்றி; ஸ்வப்னில் அசத்தல்.!
பிரிட்டிஷ் டைவர் நோவா வில்லியம்ஸ்:
நோவா வில்லியம்ஸ் பிரிட்டிஷ் டைவர் ஆவார். இவருக்கும் ஒன்லி ஃபேன்ஸில் கணக்கு உள்ளது. இவரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார்.
ஜெர்மன் தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட்:
ஜெர்மன் ஓட்டப்பந்தய வீராங்கனையான அலிகா ஷ்மிட், 'உலகின் கவர்ச்சியான விளையாட்டு வீராங்கனை' என்று அழைக்கப்படுகிறார். இவர் அடிக்கடி ஒன்லி ஃபேன்ஸில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கனடாவை சேர்ந்த போல் வால்டர் அலிஷா நியூமன்:
கனடா நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனையான அலிஷா நியூமன், தனது அட்டகாசமான பிகினி புகைப்படங்கள் மூலம் இணையத்தில் கலக்கி வருகிறார். இந்த புகைப்படங்களை அவர் தனது பல்வேறு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அலிஷா 2016 மற்றும் 2020 ஆகிய இரண்டிலும் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். தற்போது, அவர் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிலும் பங்கு பெற்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் அடல்ட் கண்டெட்டுக்கு பெயர்போன ஒன்லி ஃபேன்ஸில் கணக்கு வைத்துள்ளனர். இதில், அவர்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, குறிப்பிட்ட பணம் நிர்ணயித்து அதன்மூலமாகவும் சம்பாதித்து வருகின்றனர்.