India Women Vs Bangladesh Women: இந்தியா Vs பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs வங்கதேச பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 26-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

India Women Cricket Team (Photo Credit : @BCCI X)

அக்டோபர் 25, நவி மும்பை (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup) தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 31 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 25 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அக்டோபர் 26 ஆம் தேதியான நாளை நடைபெறும் 28 வது போட்டியில் இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியும், பங்களாதேஷ் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) மோதுகிறது. இந்தப் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்தியா எதிர் வங்கதேசம் (India - Bangladesh Women's Cricket Match):

மகளிர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில் முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று தோல்விகளை தழுவி பின் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் வங்கதேச அணி 6 போட்டிகளில் 1 வெற்றி 5 தோல்வி என புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது. INDW Vs NZW: நியூசிலாந்து போராடி தோல்வி.. அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி..!

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் வெற்றி வாகை சூடப்போவது யார்? (India Vs Bangladesh Women's Cricket Winning Prediction):

நாளை நடைபெறும் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணி வெற்றி பெற 93% வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி 7% வெற்றி வாய்ப்பை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீண்டும் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி செய்யப்போவது என்ன? என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இரண்டு அணியும் சமமான அளவு திறனுடன் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா Vs பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs Bangladesh):

போட்டி அணிகள்: இந்தியா W Vs பங்களாதேஷ்W (India Women's Vs Bangladesh Women's Cricket)

நடைபெறும் இடம்: டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானம், நவி மும்பை, மகாராஷ்டிரா

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement