India Women Vs New Zealand Women (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 23, நவி மும்பை (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) இந்திய மகளிர் அணி - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய 24வது லீக் போட்டி, நவி மும்பையில் நடைபெற்றது. BAN Vs WI, 3rd ODI: ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்.. 179 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!

இந்திய மகளிர் எதிர் நியூசிலாந்து மகளிர் (India Women Vs New Zealand Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சோஃபி டெவின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 340 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 122 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 109 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76* ரன்கள் அடித்தனர். மழை காரணமாக டிஎல்எஸ் முறைப்படி, 44 ஓவர்களில் 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 271 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ப்ரூக் ஹாலிடே 81 ரன்கள், இசபெல்லா கேஸ் 65* ரன்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய மகளிர் அணி:

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.

நியூசிலாந்து மகளிர் அணி:

சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்.