India Women Vs New Zealand Women: இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 23-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

Harmanpreet Kaur - Sophie Devine | INDW Vs NZW (Photo Credit : @ICC / @cricketworldcup X)

அக்டோபர் 22, நவி மும்பை (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup) தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 31 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 23 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அக்டோபர் 23ஆம் தேதியான நாளை தொடரின் 24 வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியும், நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) மோதுகிறது. இந்தப் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்தியா எதிர் நியூசிலாந்து (India - New Zealand Women's Cricket Match):

மகளிர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில் முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று தோல்விகளை தழுவி உள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி முதல் இரண்டு தோல்வி, ஒரு வெற்றி, இரண்டு முடிவு பெறாத ஆட்டம் என புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது. India Vs Australia: இந்தியா-ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் வெற்றி வாகை சூடப்போவது யார்? (India Vs New Zealand Women's Cricket Winning Prediction):

நாளை நடைபெறும் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணி வெற்றி பெற 76% வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் நியூசிலாந்து இந்தியாவுக்கு கடினமான சவாலான போட்டியை கொடுக்கும். நியூசிலாந்து அணி 24% வெற்றிவாய்ப்பை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி செய்யப்போவது என்ன? என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இரண்டு அணியும் சமமான அளவு திறனுடன் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs New Zealand):

போட்டி அணிகள்: இந்தியா W Vs நியூசிலாந்து W (India Women's Vs New Zealand Women's Cricket)

நடைபெறும் இடம்: டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானம், நவி மும்பை, மகாராஷ்டிரா

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement