அக்டோபர் 22, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் மோதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, நாளை (அக்.23) இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் அடுத்த ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. ஷுப்மன் கில் இந்த போட்டியை இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்துகிறார். அணியில் ரோகித் சர்மா, ஸ்ரேயா ஐயர், விராட் கோலி, ஜெய்ஸ்வால், அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், கே.எல் ராகுல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் உட்பட முக்கிய வீரர்கள் இருக்கின்றனர்.
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் (India Vs Australia Cricket Match):
கடந்த போட்டி தோல்வியில் முடிந்ததால், எஞ்சிய 2 போட்டியிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி தொடருக்கான கோப்பையை கைப்பற்றும். இதனால் தற்போதைய போட்டியிலும், அடுத்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பார்மிங்கில் இந்திய அணி அசத்தலாக இருந்தாலும், ஃபீல்டுக்கு சென்ற பின்னர் சொதப்பல் ஆட்டம் வெளிப்படுவது ரசிகர்களுடைய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தன்னை வலுவாக கட்டமைத்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இந்த யுத்தத்தில் இரண்டாவது போட்டியிலாவது இந்தியா வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிட்டியில் நேரலையில் பார்க்கலாம். India Vs Australia: இந்தியா-ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?
பிட்ச் நிலவரம் என்ன? வெற்றிவாய்ப்பு யாருக்கு? (IND Vs AUS):
ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பொறுத்தவரை, அது ஆஸ்திரேலிய அணியினருக்கு பரீட்சியமான களம் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா சரியான திட்டமிடங்களுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஓவல் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற 40% வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தோல்வியடைய 60% வாய்ப்புள்ளதாகவும் கவனிக்கப்படுகிறது.
- போட்டி: இந்தியா Vs ஆஸ்திரேலியா
- வகை: 50 ஓவர் ஒருநாள் போட்டி
- நேரம்: காலை 09:00 மணி (இந்திய நேரப்படி)
- வானிலை நிலவரம்: மழை வாய்ப்பு குறைவு, திடீர் மழையை எதிர்பார்க்கலாம்
- நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைக்காட்சி), ஜியோ ஹாட்ஸ்டார் (ஓடிடி)