INDW Vs SAW Highlights: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டி 2025: இந்தியா திரில் வெற்றி.. இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி.!
ICC Women's World Cup Victory 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதிய இறுதி போட்டியில், அணி வெற்றி அடைந்தது.
நவம்பர் 02, நவி மும்பை (Sports News): இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup Finals 2025) இன்று முடிவுக்கு வந்தது. இதுவரை நடந்த 30 ஆட்டங்களில் இறுதிப்போட்டிக்கு, இந்தியா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) தேர்வாகி இருந்தது. இன்று இந்தியா பெண்கள் Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் (India Women Vs South Africa Women) இடையே இறுதிப்போட்டி நவி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமானாலும், விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. INDW Vs SAW: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட ஷெபாலி வர்மா.. இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி ஆட்டம்.! 299 ரன்கள் இலக்கு.!
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (India Women Vs South Africa Women Cricket):
இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 45 ரன்கள், ஷபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள், ஜெமியா ரோட்ரிங்ஸ் 37 பந்துகளில் 24 ரன்கள், ஹர்மன்ப்ரீத் கவுர் 29 பந்துகளில் 20 ரன்கள், தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன்கள், அமஞ்சோத் கவுர் 14 பந்துகளில் 12 ரன்கள், ரிச்சா கோஷ் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 298 ரன்கள் எடுத்தனர். இதனால் தென்னாபிரிக்கா அணி வெற்றிக்கு 299 ரன்கள் தேவை ஆகும். தென்னாபிரிக்க அணியின் சார்பில் விளையாடிய அயோபொங்கா 3 விக்கெட் எடுத்திருந்தனர்.
இந்தியா அணி திரில் வெற்றி:
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியினர் நின்று விளையாடினாலும் பல தடுமாற்றம் இருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய லாரா 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார். டாஸிமின் 35 பந்துகளில் 23 ரன்களும், சுனி லுஸ் 31 பந்துகளில் 25 ரன்களும், சினோலா 29 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அனிரி 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். நடினே 19 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்தார். 45.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி பெற்று ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025ஐ தனதாக்கி இருக்கிறது.
இந்தியா சாம்பியன்ஸ்:
WE ARE THE CHAMPIONS!
Every ounce of effort, every clutch moment, every tear, all of it has paid off. 💙#CWC25 #INDvSA pic.twitter.com/hhxwlStp9t
— Star Sports (@StarSportsIndia) November 2, 2025
(The above story first appeared on LatestLY on Nov 03, 2025 12:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

