INDW Vs SAW: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட ஷெபாலி வர்மா.. இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி ஆட்டம்.! 299 ரன்கள் இலக்கு.!

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற்றது. தென் ஆப்ரிக்கா அணி வெற்றிக்கு 299 ரன்கள் தேவைப்படுகிறது.

INDW Vs SAW: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட ஷெபாலி வர்மா.. இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி ஆட்டம்.! 299 ரன்கள் இலக்கு.!
INDW Vs SAW Final 2025 (Photo Credit: @BCCIWomen X)

நவம்பர் 02, நவி மும்பை (Sports News): இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup Finals 2025) இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை நடந்த 30 ஆட்டங்களில் இந்தியா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தது. இன்று இந்தியா பெண்கள் Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் (India Women Vs South Africa Women) இடையே இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி ஐசிசி மகளிர் உலக கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி அதீத எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த போட்டியின் நேரலையை (INDW Vs SAW Final Live Streaming) ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் காணலாம். இரு அணிகளும் சமமான அளவு போட்டித் தன்மையுடன் விளையாடும் என்பதால் போட்டி (INDW Vs SAW Final Live Score) மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமானாலும், விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. IND Vs AUS 3rd T20I: இந்தியா அசத்தல் வெற்றி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் திரில் ஆட்டம்.!

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (India Women Vs South Africa Women Cricket):

இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 45 ரன்கள், ஷபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள், ஜெமியா ரோட்ரிங்ஸ் 37 பந்துகளில் 24 ரன்கள், ஹர்மன்ப்ரீத் கவுர் 29 பந்துகளில் 20 ரன்கள், தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன்கள், அமஞ்சோத் கவுர் 14 பந்துகளில் 12 ரன்கள், ரிச்சா கோஷ் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 298 ரன்கள் எடுத்தனர். இதனால் தென்னாபிரிக்கா அணி வெற்றிக்கு 299 ரன்கள் தேவை ஆகும். தென்னாபிரிக்க அணியின் சார்பில் விளையாடிய அயோபொங்கா 3 விக்கெட் எடுத்திருந்தனர்.

ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டம்:

தீப்தி ஷர்மா அசத்தல் ஆட்டம்:

(The above story first appeared on LatestLY on Nov 02, 2025 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).