IRE Vs ENG 1st T20I: அயர்லாந்து அணி அபார பேட்டிங்.. இங்கிலாந்து வெற்றி பெற 197 ரன்கள் இலக்கு..!
அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்கள் அடித்துள்ளது.
செப்டம்பர் 17, டப்லின் (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், டப்லினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும். அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெற்று வருகிறது. IRE Vs ENG 1st T20I, Toss: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20.. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (Ireland Vs England):
பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, ஜேக்கப் பெத்தேல் தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அயர்லாந்து அணி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேக்கப் பெத்தேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அயர்லாந்து அபாரம்:
அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் 34, ரோஸ் அடேர் 26 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இதன்பின்னர், ஹாரி டெக்டர் 61* ரன்கள், லோர்கன் டக்கர் 55 ரன்கள் அடித்தனர். இதன்மூலம், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து சார்பில் ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
அயர்லாந்து அணி வீரர்கள்:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், பாரி மெக்கார்த்தி, கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிரேக் யங்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத், லூக் வுட்.