IRE Vs ENG 1st T20I, Toss: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20.. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (IRE Vs ENG T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IRE Vs ENG 1st T20I, Toss: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20.. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
IRE Vs ENG 1st T20I, Toss (Photo Credit: @ESPNcricinfo X)

செப்டம்பர் 17, டப்லின் (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், டப்லினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டி தொடங்கும். இந்நிலையில், அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. BAN Vs AFG: சுழல் ஜாலம் காட்டிய ஆப்கானிஸ்தான்.. வங்கதேசம் 154 ரன்கள் குவிப்பு..!

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (Ireland Vs England):

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, ஜேக்கப் பெத்தேல் தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அயர்லாந்து அணி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேக்கப் பெத்தேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அயர்லாந்து அணி வீரர்கள்:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், பாரி மெக்கார்த்தி, கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிரேக் யங்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத், லூக் வுட்.

(The above story first appeared on LatestLY on Sep 17, 2025 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).