BAN Vs AFG (Photo Credit: @clinkwrites X)

செப்டம்பர் 16, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். BAN Vs AFG, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆப்கானிஸ்தான் சுழல் ஜாலம் பலிக்குமா..?

வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் (Bangladesh Vs Afghanistan):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) 9வது லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வங்கதேசம் நிதான பேட்டிங்:

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் தமீம் 52 ரன்கள், சைஃப் ஹாசன் 30 ரன்கள் அடித்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மது தலா 2 விக்கெட்கள், அஸ்மத்துல்லா ஒமர்சாய் 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி வீரர்கள்:

தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹாசன், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், நூருல் ஹசன், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

செடிகுல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அஹ்மது, அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.