IPL 2025 Suspended: ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒத்திவைப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக மீதவுள்ள ஐபிஎல் 2025 தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 09, சென்னை (Sports News): ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் காரணமாக நடப்பு ஐபிஎல் (IPL 2025) தொடர் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. MS Dhoni: மின்னல் வேக நாயகன் செய்த மாயாஜாலம்.. விக்கெட் காலி.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!
ஐபிஎல் 2025 ஒத்திவைப்பு:
நேற்று (மே 08) தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதுவரை 58 லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில், இன்று 59வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அசாதரண சூழல் காரணமாக மீதவுள்ள ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா ஐபிஎல் 2025 தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு:
🚨 News 🚨
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
(The above story first appeared on LatestLY on May 09, 2025 03:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

