Legendary Mary Kom Opens Up: குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா?.. விளக்கம் அளித்த மேரி கோம்..!

குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெரிவித்துள்ளார்.

Mary Kom (Photo Credit: @ANI X)

ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், “பாக்சிங் ரிங்குங்குள் விளையாடும் ஆர்வம் எனக்குள் அப்படியே உள்ளது. ஆனாலும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் வயது வரம்பு சார்ந்த விதி காரணமாக நான் அதை தொடர் முடியாது. 40 வயது வரை மட்டுமே ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டையில் விளையாட முடியும். வயது வரம்பு முடிந்துவிட்டதால் என்னால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் விளையாட விரும்புகிறேன். ஆனால், வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் ஓய்வு பெறுகிறேன்” என தெரிவித்திருந்தார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Tata CNG Automatic Cars: டாடா சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார்களுக்கு புக்கிங் தொடக்கம்.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement