Tata CNG Automatic Cars (Photo Credit: @AarizRizvi X)

ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், விரைவில் இந்தியாவின் சிஎன்ஜி (CNG) கார் பிரிவில், டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி (Tigor CNG AMT) ஆகிய இரண்டு ஏஎம்டி (AMT) ஆப்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இதற்காக இந்தியாவில் புக்கிங் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையிலேயே புக்கிங்கள் தொடங்கி இருக்கின்றன. Students Fined For Skipping Classes On Jan 22: ராமர் கோயில் திறப்பு விழா.. விடுப்பு எடுத்து கோவில் சென்ற மாணவர்களுக்கு அபராதம்..!

சிறப்பம்சங்கள்: 1.2 லிட்டர் எஞ்சினே இந்த கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 73.5 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் மைலேஜ் திறன் ஒரு கிலோவிற்கு 22 கிமீ முதல் 24 கிமீ வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இதன் ஏஎம்டி ஆப்ஷனின் மைலேஜ் விபரங்களை பற்றி டாடா அறிவிக்கவில்லை.