Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை.. ஷர்துல் தாக்கூர் அபாரம்..!

மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை.. ஷர்துல் தாக்கூர் அபாரம்..!
Shardul Thakur (Photo Credit: @circleofcricket X)

ஜனவரி 30, மும்பை (Sports News): ரஞ்சிக் கோப்பை 2024-25ஆம் (Ranji Trophy) ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர், மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய போட்டியில் மும்பை - மேகாலயா (Mumbai Vs Meghalaya) அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மேகாலயா அணி மும்பை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. IND Vs ENG 4th T20i: இந்தியா - இங்கிலாந்து நான்காவது டி20 ஆட்டம்.. எங்கு? எப்போது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

'ஹாட்ரிக்' விக்கெட்:

இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் (Shardul Thakur), ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர், முதல் இன்னிங்ஸில் தனது 2வது ஓவரில் மேகாலயா அணி வீரர்கள் அனிருத், சுமித் குமார் மற்றும் ஜஸ்கிரத் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஹாட்ரிக் விக்கெட்டுகளை (Hat-Trick Wicket) பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம், ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய 5வது பந்துவீச்சாளர் எனும் பெருமையும் ஷர்தூல் தாக்கூர் பெற்றார்.

ரஞ்சி கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணி வீரர்கள்:

  • ஜஹாங்கீர் பெஹ்ராம்ஜி கோட் Vs பரோடா - 1943-44
  • உமேஷ் நாராயண் குல்கர்னி Vs குஜராத் - 1963-64
  • அப்துல் முசாபாய் இஸ்மாயில் Vs சவுராஷ்டிரா - 1973-74
  • ராய்ஸ்டன் ஹரோல்ட் டயஸ் Vs பீகார் - 2023-24
  • ஷர்துல் தாக்கூர் Vs மேகாலயா – 2024-25

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஷர்தூல் தாக்கூர் சாதனை:

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).