IND Vs ENG 4th T20i: இந்தியா - இங்கிலாந்து நான்காவது டி20 ஆட்டம்.. எங்கு? எப்போது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

முதல் 2 போட்டிகளில் வெற்றியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியுற்ற நிலையில் 2 க்கு 1 கணக்கில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் புள்ளிகள் பெற்றுள்ளன. எஞ்சிய 2 ஆட்டத்தில் இந்தியா இரண்டில் ஒன்றில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

IND Vs ENG 4th T20i: இந்தியா - இங்கிலாந்து நான்காவது டி20 ஆட்டம்.. எங்கு? எப்போது? நேரலையை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

ஜனவரி 29, புனே (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, மூன்றாவது டி20 போட்டி நேற்று (28 ஜனவரி 2025) குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை நடப்பு சீசனில் உறுதி செய்தது. இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. IND Vs ENG 3rd T20I 2025: இந்திய அணி படுதோல்வி.. இலக்கை நெருங்க இயலாமல் திணறிய வீரர்கள்.. இங்கிலாந்து முதல் மாஸ் வெற்றி.! 

இந்தியா - இங்கிலாந்து 4 வது டி20 (IND Vs ENG 4th T20i):

இந்த தொடரின் நான்காவது டி20 (India Vs England 4th T20i) ஆட்டம், மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள மஹாராஷ்ரா கிரிக்கெட் அசோசியேசன் (Maharashtra Cricket Association Stadium) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 31 ஜனவரி 2025 அன்று, இரவு 06:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, அதனைத்தொடர்ந்து 7 மணிக்கு போட்டி தொடங்கி, 11 மணிக்குள் நிறைவுபெறும். அன்றைய நாளில் புனே மைதானத்தில் பகல் நேர வெப்பநிலை 32 டிகிரியும், இரவுநேர வெப்பநிலை 15 டிகிரி செல்ஸியஸ் அளவும் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 5 கிமீ வேகம் என்ற நிலையில் இருக்கும். இந்த போட்டியில் இரண்டு அணிகளும் பரஸ்பரம் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பதால், ஆட்டம் சுவாரசியத்தன்மையுடன் இருக்கும். 42,000 பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கும் திறனுடன் புனே மைதானம் இருக்கிறது. Varun Chakravarthy: 4 ஓவரில் 5 விக்கெட்.. ஒரே மேட்சில் உச்சம் தொட்ட வருண் சக்கரவர்த்தி..! குவியும் பாராட்டுக்கள்.! 

நேரலையில் பார்ப்பது எப்படி? (IND Vs ENG T20i Live Watching)

இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஓடிடியில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் (Disney Hotstar)ல் நேரலையில் பார்க்கலாம்.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).