New Zealand ICC Points: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்த நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி சரிவை சந்தித்துள்ளது.

New Zealand ICC Points: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்த நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்..!
NZ Vs AUS (Photo Credit: @cricketcomau X)

மார்ச் 11, துபாய் (Cricket News): ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2-வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. Ghazipur Accident: காஜிபூரில் பயங்கர விபத்து.. மின்கம்பியில் இடித்து பற்றி எரிந்த பேருந்து.. 6 பேர் பலி..!

சரிவை சந்தித்த நியூசிலாந்து: இந்நிலையில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதின் மூலம் 62.5 சதவீதம் பெற்று ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த நியூசிலாந்து அணி 50 சதவீதம் பெற்று 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் இந்தியா 68.51 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. வங்கதேச அணி (50 சதவீதம்) 4-வது இடத்திலும், 5-வது இடத்தில் பாகிஸ்தானும் (36.66 சதவீதம்) உள்ளன. மேலும், 6 முதல் 9 இடங்கள் முறையே வெஸ்ட் இண்டீஸ் (33.33 சதவீதம்), தென் ஆப்பிரிக்கா (25 சதவீதம்), இங்கிலாந்து (17.5 சதவீதம்), இலங்கை (0.0 சதவீதம்) ஆகிய அணிகள் உள்ளன.

(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).