NZ Vs AUS 1st T20I: மிட்செல் மார்ஷ் அதிரடி.. டிம் ராபின்சன் சதம் வீண்.., ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
நியூசிலாந்து எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அக்டோபர் 01, பே ஓவல் (Sports News): ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்திய நேரப்படி காலை 11. 45 மணிக்கு போட்டிகள் தொடங்கும். மூன்று டி20 போட்டிகளும், மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறும். இந்நிலையில், முதலாவது டி20ஐ போட்டியில் இன்று (அக்டோபர் 01) நியூசிலாந்து - ஆஸ்திரேலியா (NZ Vs AUS) அணிகள் மோதின. INDW Vs SLW Cricket: 59 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி.. இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்.. போராடி வீழ்ந்த இலங்கை.!
நியூசிலாந்து எதிர் ஆஸ்திரேலியா (New Zealand Vs Australia):
மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் அபாரமாக விளையாடி 66 பந்தில் 106* ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 34 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் பென் டுவார்ஷுயிஸ் 2, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி:
இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 85 ரன்கள், டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் அடித்தனர். இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பெற்று சென்றார்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
டிம் சீஃபர்ட், டெவன் கான்வே, டிம் ராபின்சன், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், பெவன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜகரி ஃபோல்க்ஸ், கைல் ஜேமீசன், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஓவன், பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
(The above story first appeared on LatestLY on Oct 01, 2025 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

