செப்டம்பர் 30, கவுகாத்தி (Sports News): ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (Women's Cricket World Cup) இன்று முதல் தொடங்கியுள்ளது. போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's Cricket Team) மோதின. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது. Women's World Cup 2025 Google Doodle: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.!
இந்திய மகளிர் அணி அதிரடி ரன்கள் kuvipu (India Women's Cricket Team):
இந்திய அணியின் சார்பில் விளையாடிய பிரதிகா ராவல் 59 பந்துகளில் 37 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 10 பந்துகளில் 8 ரன்களும், ஹர்லீன் டியோல் 64 பந்துகளில் 48 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 19 பந்துகளில் 21 ரன்களும், தீப்தி ஷர்மா 53 பந்துகளில் 53 ரன்களும், அமஞ்சோத் கவுர் 57 பந்துகளில் 56 ரன்களும், ஸ்நேஹ் ராணா 28 பந்துகளில் 15 ரன்களும் எடுத்திருந்தனர். மழையின் காரணமாக இடையில் ஏற்பட்ட தடையால் 47 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களை குவிந்திருந்தது. இலங்கை அணியின் சார்பில் விளையாடிய இனோகா ரனவீரா 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருந்தார். தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி களமிறங்கியது.
திணறிய இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (Sri Lanka National Women's Cricket Team):
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். இந்திய அணியின் ரன்கள் குவிப்பை எதிர்கொள்ள இலங்கை அணியினர் நின்று ஆடினாலும், இறுதியில் தோல்வி கிடைத்தது. இலங்கை அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ஹாசினி பெரேரா 20 பந்துகளில் 14 ரன்களும், சமாரி அதப்பத்து 47 பந்துகளில் 43 ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 45 பந்துகளில் 29 ரன்களும், விஷ்மி குணரத்னே 28 பந்துகளில் 11 ரன்களும், கவிஷா திஹாரி 12 பந்துகளில் 15 ரன்களும், நிலக்ஷிகா சில்வா 29 பந்துகளில் 35 ரன்களும், சுகந்திகா குமாரி 19 பந்துகளில் 10 ரன்களும், அச்சினி குலசூரியா 31 பந்துகளில் 17 ரன்களும், உதேஷிகா ப்ரபோதணி 26 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்திய அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் ஸ்நேஹ் ராமா, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகள், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை காப்பாற்றி அசத்தி இருந்தனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி திரில் வெற்றி (India Women's Cricket Team Victory):
World Cup 2025. India (Women) Won by 59 Run(s) (D/L Method) https://t.co/lcSNn79t77 #INDvSL #CWC25 #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) September 30, 2025