NZ Vs SA: முத்தரப்பு டி20 தொடர்.. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!

முத்தரப்பு டி20 தொடரின் 5வது போட்டியில், நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை (ஜூலை 22) மோதுகின்றன.

NZ Vs SA: முத்தரப்பு டி20 தொடர்.. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!
New Zealand Vs South Africa (Photo Credit: @Predict88cricke X)

ஜூலை 21, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். நடந்து முடிந்த 4 லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், முதல் இரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிபோட்டியில் மோதும். அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும். BAN Vs PAK 2nd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 2வது டி20.. வெல்ல போவது யார்..?

நியூசிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (New Zealand Vs South Africa):

இந்நிலையில், நாளை (ஜூலை 22) நடைபெறும் 5வது லீக் போட்டியில், நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, ராஸ்ஸி வான் டெர் டுசென் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 16 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 5 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

நியூசிலாந்து அணி வீரர்கள்:

டிம் சீஃபர்ட், டெவோன் கான்வே, ராச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஆடம் மில்னே, மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷாம், வில்லியம் ஓரூர்க், மிட்செல் ஹே, டிம் ராபின்சன், ஜகாரி ஃபோல்க்ஸ்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), ரூபின் ஹெர்மன், டெவால்ட் பிரெவிஸ், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஆண்டிலே சிமெலேன், நகாபயோம்ஸி பீட்டர், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி, செனுரான் முத்துசாமி, ஜெரால்ட் கோட்ஸி, க்வேனா மபாகா.

(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 10:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).