Praggnanandhaa Loses Consecutively In St Louis Chess 2024: செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா தொடர் தோல்வி..!
செயின்ட் லூயிஸ் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
ஆகஸ்ட் 14, செயின்ட் லூயிஸ் (Sports News): அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் செயின்ட் லூயிஸ் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் (St Louis Rapid And Blitz Chess 2024) நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா (Praggnanandhaa), பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா, மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ், அமெரிக்காவின் லெய்னியர் டொமிங்குவேஸ் பெரெஸ், லெவோன் அரோனியன், ஹிகாரு நகமுரா, பேபியானோகருனா, சோ வெஸ்லி, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். Vinesh Phogat Medal Decision: வெள்ளிப் பதக்கத்தை பெறுவாரா வினேஷ் போகத்? வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு..!
இந்த தொடரின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவோன் அரோனியனுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதனைத்தொடர்ந்து 2-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். 3-வது சுற்றில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா மீண்டும் தோல்வியை சந்தித்தார். இன்னும், 6 சுற்றுகள் உள்ள நிலையில், பிரக்ஞானந்தா 0.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார். பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

