Wrestler Vinesh Phogal (Photo Credit @DeepaliSolankey @BiIndia/status X)

ஆகஸ்ட் 13, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics) போட்டிகள் 19 நாட்களுக்கு பின், கடந்த 26 ஜூலை அன்று தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி கொண்டாட்டங்களுடன் நிறைவுபெற்றது. உலகளவில் 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளாக நடைபெற்ற ஆட்டங்களில் கலந்துகொண்டனர். நாடுகள் வாரியாக அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

வினேஷ் போகத்: இந்தியா சார்பில் களம்கண்ட 120 பேரில் துப்பாக்கிசூடுதல், ஈட்டி எறிதல், ஹாக்கி, மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மல்யுத்த விதிப்படி போட்டி நடைபெறும் நாள் மற்றும் போட்டிக்கு முந்தைய நாள் போட்டி நடக்கும் எடை அளவிலே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Tom Cruise At Paris Olympics 2024 Closing Ceremony: 2024 பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா; ஹாலிவுட் நடிகரின் சாகசங்கள்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

இன்று தீர்ப்பு: இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இந்த சூழலில் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு (Vinesh Phogat Verdict) வழங்கப்படவுள்ளது.