PKL 2025: 15வது லீக் போட்டியில் மும்பை - பெங்களூரு.. மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - உபி அணிகள் இன்று மோதல்..!

ப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 05) 15வது லீக் போட்டியில், யு மும்பை - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 16வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - உபி யோதாஸ் அணிகளும் மோதுகின்றன.

PKL 2025 Sep 05 Matches (Photo Credit: @StarSportsKan X)

செப்டம்பர் 05, விசாகப்பட்டினம் (Sports News): 2025 ப்ரோ கபடி லீக் (PKL) தொடர், 12வது சீசன் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தத் தொடரில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பை, ஹரியானா ஸ்டீலர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உபி யோதாஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 2025 ப்ரோ கபடி லீக் சீசன் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். PAK Vs UAE: பாகிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு..!

ப்ரோ கபடி லீக் 2025 இன்றைய போட்டிகள் (Pro Kabaddi League 2025 Today Matches):

இதில், நேற்று (செப்டம்பர் 04) இரவு 8 மணிக்கு நடந்த 13வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 32-37 என தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடந்த 14வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் 28-28 என சமனில் முடிந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 05) இரவு 8 மணிக்கு நடைபெறும் 15வது லீக் போட்டியில், யு மும்பை - பெங்களூரு புல்ஸ் (U Mumba Vs Bengaluru Bulls) அணிகளும், இரவு 9 மணிக்கு 16வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - உபி யோதாஸ் (Haryana Steelers Vs UP Yoddhas) அணிகளும் மோதுகின்றன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement