செப்டம்பர் 04, ஷார்ஜா (Sports News): ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த முத்தரப்பு டி20 தொடர், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 07ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் மோதும். அனைத்து போட்டிகளும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகியது. ENG Vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்கா 330 ரன்கள் குவிப்பு.. வெற்றி பெறுமா இங்கிலாந்து..?
பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (Pakistan Vs United Arab Emirates):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 04) நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் (PAK Vs UAE) அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில், சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது. முகமது வசீம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகம் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அதிரடி பேட்டிங்:
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஃபகார் ஜமான் 77* ரன்கள், முகமது நவாஸ் 37* ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். யுஏஇ சார்பில் ஹைதர் அலி 2, முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக் மற்றும் துருவ் பராஷர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, சல்மான் மிர்சா, அப்ரார் அகமது.
ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:
முஹம்மது வசீம் (கேப்டன்), ஆசிப் கான், அலிஷன் ஷரபு, ராகுல் சோப்ரா, எதன் டிசோசா, ஹர்ஷித் கௌஷிக், துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக்.