ஜூன் 12, அல்ரேயான் (Sports News): 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று (World Cup Football Qualifiers)ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றைய தினம் இந்தியா-கத்தார் அணிகள் தோஹாவில் உள்ள ஜாசிம் பின் ஹமாத் ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில், இறுதியில் கத்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. US President Son Convicted: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் "குற்றவாளி"; 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. கலக்கத்தில் அதிபர் குடும்பம்..!
இந்த ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் இந்திய அணியின் கோல்கீப்பர் குர்ப்ரீத் போஸ்டில் இருந்து பந்தை தடுக்க முயன்றார். அப்போது, பந்து கோட்டை விட்டு வெளியே சென்றது. ஆனால், கத்தாருக்கு ஒரு கார்னர் கிடைத்தது. அல்-ஹஷ்மி பந்தை பாக்ஸுக்குள் திருப்பி அடித்தார். அய்மென் அதை ஒரு கோலுக்குத் தட்டினார்.
இதன்பின்னர், கத்தார் அணி வீரர்கள் கோலாகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், அதே நேரத்தில் இந்திய வீரர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பந்து கோட்டைவிட்டு தாண்டியதை விளக்க லைன் ரெஃப்ரியை நோக்கி சென்றனர். ஆனால், போட்டி அதிகாரிகள் யாரும் கோரிக்கைக்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை. மேலும், எந்த விஏஆர் (VAR) முடிவும் இல்லாமல், அம்பயரின் தவறான தீர்ப்பு காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்தும் வெளியேறியது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா அணியின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.
BLATANT CHEATING!! UNBELIEVABLE pic.twitter.com/7eJKoyy0St
— DAKSH (@Pahadibhula77) June 11, 2024