US President And His Son | Hunter Biden File pic (Photo Credit: @atrupar X | @DailyLoud X)

ஜூன் 12, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (US President Joe Biden) மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாகத் துப்பாக்கி (Illegal Buying a Gun) வாங்கியது தொடர்பான மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில், துப்பாக்கி வாங்க 18 வயதை கடந்தவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாக கடைகளில் சென்று வாங்கலாம். அங்கு, ஒரு விண்ணப்பத்தை அவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்டவைகள் இருக்கும். இந்நிலையில், ஹண்டர் பைடன் கடந்த 2018-ஆம் ஆண்டு கடைக்கு சென்று துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார்.

அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு, அவர் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கியை அவர் சுமார் 11 நாட்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. Chemical Factory Fire Accident: மும்பை ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; பொதுமக்கள் அச்சம்..!

இதுதொடர்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் தெரிவித்தது. போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட 3 வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில், முதல் 2 வழக்குகளில் தலா 10 ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டுகள் என மொத்தம் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் மகன் ஒருவருக்கு குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல் நிகழ்வாகும். இந்த தீர்ப்பை எதிர்த்து அதிபரின் மகன் ஹண்டர் பைடன் மேல்முறையீடு செய்யவுள்ளார். மேலும், அதிபர் ஜோ பைடன் குடும்பத்தை, முன்னாள் அதிபர் டிரம்ப் கிரிமினல் குடும்பம் என குற்றம் சாட்டியுள்ளார்.