ஜூலை 01, டெல்லி (Sports News): ஐசிசி 9-வது டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். Husband Killed His Wife: காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்; திருமணமான 3 ஆண்டுகளில் அதிர்ச்சி..!
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் (Retirement From T20 International) சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதுகுறித்து, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பது போல, என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை எப்போதும் செய்து வருகின்றேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவேன். டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. ரவீந்திரசிங் ஜடேஜா" என பதிவிட்டுள்ளார்.
No True #RavindraJadeja Fan will pass without liking this post 🔥
Ravindra Jadeja End of a beautiful T20I carrier 🙏
Happy Retirement jaddu 🤝
THE END OF ERA FOR INDIA IN T20I Cricket #indiawin #ForeverThalapathy #Retirementpic.twitter.com/iKmavrwf2n
— WORLD CUP FOLLOWER (@BiggBosstwts) June 30, 2024