Husband Killed His Wife: காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்; திருமணமான 3 ஆண்டுகளில் அதிர்ச்சி..!
திருச்சியில் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, கணவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 01, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர், அதே பகுதியை சேர்ந்த வீரம்மாள் என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த காதல் ஜோடிக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. Vidaa Muyarchi First Look Out: திருவினையாகிறது அஜித்தின் விடாமுயற்சி.. அவர் பாதையில் முன்னேறும் ஃபர்ஸ்ட் லுக்..!
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு பிரவீன் குமார் தினமும் மது அருந்திவிட்டு, தனது காதல் மனைவியை (Love Couple) அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த ஜூன் 26-ஆம் தேதி அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீரம்மாளின் தம்பி இவர்களது பிரச்சனையை பேசி தீர்த்து வைத்துள்ளார். பின்னர், மறுநாள் காலையில் வீரம்மாளின் தம்பிக்கு பிரவீன் குமார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வீரம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறியுள்ளார்.
உடனடியாக விரைந்து சென்ற அவர், அங்கு தனது அக்காள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனிடையே பிரவீன் தலைமறைவாகியுள்ளார். வீரம்மாளின் உறவினர்கள், பிரவீன் குமார் தான் அடித்துக் கொலை செய்துள்ளார் எனவும் அவரையும் அவரது குடும்பத்தினரை கைது செய்தால் தன் உடலை பெற்றுக் கொள்வோம் என போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
(The above story first appeared on LatestLY on Jul 01, 2024 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

