ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பண்ட் 6வது இடம்.. ரோஹித், கோலி பின்னடைவு..!
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நவம்பர் 07, துபாய் (Sports News): டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி (ICC) நேற்று (நவம்பர் 06) வெளியிட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த இந்தியா - நியூசிலாந்து தொடரில் இந்தியா 0-3 என்ற மோசமான தோல்வியை சந்தித்தது. இதில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) 11 இடங்களை இழந்து 26வது இடத்திலும், விராட் கோலி (Virat Kohli) 16 இடங்கள் பின்தங்கி 22வது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர். AFG Vs BAN: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி.. இளம் வீரரின் சுழலில் சிக்கிய வங்கதேசம்..!
இந்த தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் (Rishabh Pant) 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்தில் உள்ளார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஓர் இடம் பின்தங்கி 4வது இடத்திலும், ஷுப்மன் கில் (Shubman Gill) 4 இடங்கள் முன்னேறி 16வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 2வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்திலும் உள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

