நவம்பர் 07, சார்ஜா (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் (AFG Vs BAN 1st ODI) 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 06) ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சார்ஜாவில் (Sharjah) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, அணியின் கேப்டன் ஷாகிதி (Hashmatullah Shahidi) நிதானமாகவும் மற்றும் மூத்த வீரர் முகமது நபி (Mohammad Nabi) அதிரடியாகவும் விளையாடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் ஷாகிதி 52 ரன்களில் அவுட்டானார். IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம்; முதன்முறையாக பதிவு செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..!
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் அடித்தார். வங்கதேச அணி சார்பில் முஸ்தஃபீசூர் ரஹ்மான் (Mustafizur Rahman), தஸ்கின் அகமது தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய வங்கதேச அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி 2 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 23 ரன்களுக்குள் 8 விக்கெட்களை பறிகொடுத்து 34.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் சான்டோ (Najmul Hossain Shanto) 47 ரன்கள் அடித்தார்.
அபாரமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கஜன்ஃபர் (Allah Ghazanfar) 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் இந்தத் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை 18 வயது நிரம்பிய அல்லா கஜன்ஃபர் பெற்று சென்றார்.
சுழல் ஜாலம் காட்டிய ஆப்கானிஸ்தானின் இளம்வீரர்:
Bangladesh lost five wickets inside the last two overs!
Ghazanfar gets his maiden fifer in ODIs. What a turnaround by the Afghanistan team.
New Talents 🥳#AFGvsBAN
— Tamim (@iamtammim) November 6, 2024