HCA Action Against Head Coach Vidyuth Jaisimha: பேருந்து பயணத்தின்போதே அணியினர் முன் மதுபானம் அருந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்; விசாரணைக்கு உத்தரவிட்ட எச்.சி.ஏ.!

பயிற்சி தரும் ஆசானாக இருந்துகொண்டு, அணியினர் முன்பு பயணத்தில் மதுபானம் அருந்திய வித்யுதின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காட்சியும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

HCA Action Against Head Coach Vidyuth Jaisimha: பேருந்து பயணத்தின்போதே அணியினர் முன் மதுபானம் அருந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்; விசாரணைக்கு உத்தரவிட்ட எச்.சி.ஏ.!
Vidyuth Jaisimha Drinking Alcohol (Photo Credit: @sudhakarudumula X)

பிப்ரவரி 17, ஹைதராபாத் (Sports News): ஹைதராபாத் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருபவர் வித்யூத் ஜெய்சிம்ஹா (Vidyuth Jaisimha). இவர் கடந்த 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் தனது அணியுடன் பேருந்தில் செல்லும் போது, பெருந்திற்குள்ளேயே மதுபானம் அருந்தியதாக தெரிய வருகிறது. SK21 titled Amaran: 'எஸ்கே21' படத்தின் டீசர் ரிலீஸ்.. அமரனாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.! 

வெளியான காட்சிகள் வைரல்: இது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் தளங்களில் வைரலாக பரவி, அதனைத்தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பயிற்சியாளருக்கு பக்கவாட்டில் இருந்த நபரால் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில், வித்யூத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. Cop Died Farmers Protest: விவசாயிகள் போராட்டத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மரணம்; சோகத்தில் அதிகாரிகள்.! 

விசாரணைக்கு உத்தரவு: இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (Hyderabad Cricket Association HCA), இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும், விசாரணை நடைபெறும் வரை அணியின் செயல்பாடுகளில் இருந்து தாமாக முன்வந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 09:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).