SL Vs BAN 2nd Test, Day 2: பதும் நிசங்கா - சண்டிமால் இணை அபாரம்.. இலங்கை 43 ரன்கள் முன்னிலை..!

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 78 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 290 ரன்கள் அடித்துள்ளது.

SL Vs BAN 2nd Test, Day 2: பதும் நிசங்கா - சண்டிமால் இணை அபாரம்.. இலங்கை 43 ரன்கள் முன்னிலை..!
SL Vs BAN 2nd Test, Day 2 (Photo Credit: @CricketTimesHQ X)

ஜூன் 26, கொழும்பு (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (SL Vs BAN Test Series 2025) விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 17ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி, நேற்று (ஜூன் 25) முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சோனி லிவ் தொலைக்காட்சி, பேன்கோடு இணையதளம் மற்றும் ஆப்பில் நேரலையில் (SL Vs BAN Test Live Streaming) பார்க்கலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (SL Vs BAN 2nd Test), வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். SL Vs BAN 2nd Test, Day 1: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. இலங்கை அணி அபார பந்துவீச்சு..!

இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தது. அனாமுல் ஹக் 10 பந்துகள் விளையாடி 0 ரன்னில் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 93 பந்துகளில் 46 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து, மொமினுல் ஹக் 21 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த கேப்டன் சாண்டோ 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 34 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, அனுபவ வாய்ந்த முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மெஹதி ஹசன் மிர்சா 31, நயிம் ஹசன் 25 ரன்கள் அடித்து அவுட்டாகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.

பதும் நிசங்கா அபாரம்:

இதனைத்தொடர்ந்து, இன்று 2ஆம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில், அசித்த பெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3, விஷ்வா பெர்னாண்டோ 2, தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய டி சில்வா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்பின்னர், களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா - லஹிரு உதார இணை தொடக்கம் கொடுத்தது. லஹிரு உதார 40 ரன்களில் அவுட்டாக, 2வது விக்கெட்டுக்கு பதும் நிசங்கா - தினேஷ் சண்டிமால் இணை நிதானமாக விளையாடி 194 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தினேஷ் சண்டிமால் 93 ரன்னில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 78 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 290 ரன்கள் அடித்துள்ளது. பதும் நிசங்கா 146* ரன்கள், பிரபாத் ஜயசூரிய 5* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை அணி 43 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jun 26, 2025 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).