SL Vs BAN 2nd Test, Day 1 (Photo Credit: @ImThimira07 X)

ஜூன் 25, கொழும்பு (Sports News): வங்கதேசம் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (SL Vs BAN Test Series 2025) விளையாடி வருகிறது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி, இன்று (ஜூன் 25) முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரை, சோனி லிவ் தொலைக்காட்சி, பேன்கோடு இணையதளம் மற்றும் ஆப்பில் நேரலையில் (SL Vs BAN Test Live Streaming) பார்க்கலாம். இன்று, 2வது டெஸ்ட் போட்டி (SL Vs BAN 2nd Test) இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். TGC Vs SMP: டிஎன்பிஎல் 23வது லீக் போட்டி.. திருச்சி - மதுரை அணிகள் இன்று மோதல்..!

இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தது. அனாமுல் ஹக் 10 பந்துகள் விளையாடி 0 ரன்னில் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 93 பந்துகளில் 46 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து, மொமினுல் ஹக் 21 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த கேப்டன் சாண்டோ 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 34 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, அனுபவ வாய்ந்த முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மெஹதி ஹசன் மிர்சா 31, நயிம் ஹசன் 25 ரன்கள் அடித்து அவுட்டாகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிசங்கா, லஹிரு உதார, தினேஷ் சன்டிமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், சோனல் தினுஷா, தரிந்து ரத்நாயக்க, விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ. ENG Vs IND 1st Test, Day 5: பென் டக்கெட் சதமடித்து அசத்தல்.. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி..!

வங்கதேச அணி வீரர்கள்:

ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மெஹதி ஹசன் மிர்சா, நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், எபாதத் ஹொசைன், நஹித் ராணா.