BAN Vs RSA 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்..!

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs RSA 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்..!
BAN Vs RSA 2nd Test, Day 1 Lunch Break (Photo Credit: @caught1bowled X)

அக்டோபர் 29, சட்டோகிராம் (Sports News): வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் (BAN Vs RSA 2nd Test, Day 1) போட்டி சட்டோகிராமில் இன்று (அக்டோபர் 29) தொடங்கியது. U23 World Wrestling Championships: யு23 உலக மல்யுத்த போட்டி; இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்று அசத்தல்..!

இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கேப்டன் மார்க்கரம் (Aiden Markram), டோனி டி சோர்சி (Tony de Zorzi) நிதானமாக விளையாடி முதல் 69 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்கரம் 33 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் (Tristan Stubbs), டி சோர்சி உடன் சேர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றார். தற்போது, மதிய உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 28 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது. டி சோர்சி 49 ரன்னிலும், ஸ்டப்ஸ் 23 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Oct 29, 2024 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).